கொழும்பு விமான நிலையத்தில் தானியங்கி நுழைவாயில்கள்
கொழும்பு - கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வசதிகளை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்தும் நோக்கில்,வெளியேறும் முனையத்தில் புதிய தானியங்கி நுழைவாயில்களை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த திட்டம் சர்வதேச புலம்பெயர்வு அமைப்பு மற்றும் ஜப்பான் அரசாங்கத்தின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படுகிறது.

ஜப்பான் அரசாங்கம் 1,170 மில்லியன் உதவி
ஜப்பான் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 1,170 மில்லியன் யென் மானிய உதவியின் கீழ் இப்பணிகள் இடம்பெறுகின்றன.
தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான எல்லைகள் சார்ந்த தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னாயத்த வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இது ஆரம்பிக்கப்பட்டது.
இதன்படி விமான நிலையத்தின் வருகை முனையத்தில் ஏற்கனவே 04 தானியங்கி நுழைவாயில்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் ஊடாக பயணிகளை அனுமதிக்கும் நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளன.