மகன் கைது; தலைமறைவான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ; கைது செய்ய 5 விசேட குழு!
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய 5 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றை அவருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் எதனோல் நிறுவனத்தின் பணிகளுக்காகப் பயன்படுத்தியதாக முறைப்பாடு அளிக்கப்பட்டது.

இருக்கும் இடத்தை பொலிஸாரால் கண்டறிய முடியவில்லை
இதன் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் 2.5 இலட்சம் ரூபாய் நிதி இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதனை அடுத்து முன்னாள் அமைச்சரை கைது செய்ய நடவடிக்கை எடுத்த போது, அவர் தற்போது இருக்கும் இடத்தை பொலிஸாரால் கண்டறிய முடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
அவரைத் தேடிக் கைது செய்வதற்காக 5 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதேவேளை நேற்றைய தினம் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் குற்றப்புலனாய்வு திணைகளத்தால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.