புத்தளத்தில் பொலிஸார் மீது தாக்குதல்!
நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் ஒருவரை கைது செய்ய சென்ற பொலிஸார் இருவர் மீது, சந்தேக நபர் தாக்குதல் நடத்தியதில் பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் நேற்று புத்தளம் வன்னாத்தவில்லு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 14ஆம் கட்டைப் பிரதேசத்தில் வைத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் புத்தளம் வன்னாத்தவில்லு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் இருவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, பொலிஸ் கான்ஸ்டபிள் இருவரையும் தாக்கியதாக கூறப்படும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வன்னாத்தவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.