அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவதற்கு பதிலாக இதையும் வாங்கலாம்
இந்த ஆண்டு அட்சய திரிதியை மே 10ம் திகதி வருகிறது. இந்த ஆண்டு மங்களகரமான வெள்ளிக்கிழமையில் ரோகிணி நட்சத்திரத்துடன் சுகர்ம யோகமும் இணைந்து வருகிறது.
ஜோதிட ரீதியாகவும் இந்த நாளில் சுப கிரகங்கள் பலவும் ஒன்று கூடிய மங்கள யோகங்களை வழங்க உள்ளன. அதனால் இந்த நாளில் தவறவிடக் கூடாத மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது.
இந்த நாளில் தங்கம், வெள்ளி மட்டும் தான் வாங்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் கிடையாது.
இந்த நாளில் மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கு சில முக்கியமான மங்கள பொருட்களை வாங்கி வீட்டில் வைத்தால், அடுத்த ஆண்டு அட்சய திரிதியை நாளுக்குள் தங்கம் போன்ற விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் அளவிற்கு மகாலட்சுமி நமக்கு அருள் செய்வாள் என்பத நம்பிக்கை.
அரிசி
பச்சரிசி, பார்லி அரிசி ஆகியவற்றை இந்த நாளில் வாங்கி வீட்டில் வைப்பது மிகவும் மங்களகரமானதாகும். பச்சரிசி வாங்காவிட்டாலும் வீட்டிக்கு சமையலுக்கு பயன்படுத்தும் அரிசியை கொஞ்சமாவது வாங்கி வீட்டில் வைக்க வேண்டும்.
மண் பானை
அட்சய திரிதியை நாளில் தங்கம், வெள்ளி வாங்க முடியாதவர்கள் மண்ணால் செய்த பானை, அல்லது மண்ணால் செய்யப்பட்ட ஏதாவது ஒரு பொருளை வீட்டில் வாங்கி வந்து வைத்தால் மகாலட்சுமி மனம் மகிழ்ந்து அந்த வீட்டில் செல்வத்தையும், மகிழ்ச்சியையும் பல மடங்காக பெருக வைப்பாள் என்பது நம்பிக்கை.
சோழி
சோழி சிறிதளவு வாங்கி வந்து மகாலட்சுமியின் படத்திற்கு அருகே, மகாலட்சுமியின் பாதத்திற்கு கீழ் வைத்து வழிபட வேண்டும். அடுத்த நாள், ஒரு சிவப்பு துணியில் அந்த சோழிகளை முடிந்து, பத்திரமாக பூஜை அறையில் அல்லது பீரோவில் வைக்கலாம். இதனால் வீட்டில் பொருளாதார நிலையும், செல்வ வளமும் உயர்ந்து கொண்டே செல்லும்.
ஸ்ரீ யந்திரம்
அட்சய திரிதியை நாளில் மிகவம் சக்தி வாய்ந்த ஸ்ரீ யந்திரம் அல்லது ஸ்ரீ சக்கரத்தை வீட்டின் பூஜை அறையில் வாங்கி வந்து வைப்பது மிகவும் நல்லது. ஸ்ரீ சக்கரம் அல்லது ஸ்ரீ யந்திரம் வீட்டில் இருந்தால் அந்த வீட்டில் மகாலட்சுமியும், பெருமாளும் மட்டுமல்ல முப்பெரும் தேவியர்களும் விரும்பி வந்து குடியேறுவார்கள். ஸ்ரீ யந்திரத்திற்கு குங்கும அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபடுவது குடும்பத்தில் சுபிட்சத்தை ஏற்படுத்தும்.
வலம்புரி சங்கு
அனைவருக்குமே தெரியும் சங்கு, மகாலட்சுமி, பெருமாள், சிவ பெருமானுக்கு உரிய மங்கள பொருள் என்று. அதிலும் வலம்புரி சங்கு மிகவும் அபூர்வமானது, மகாலட்சுமியின் அம்சமானதாகும். அட்சய திரிதியை அன்று வலம்புரி சங்கினை வாங்கி வந்து, பெருமாளின் பாதத்திற்கு அருகில் வைத்து வேண்டிக் கொள்ள வேண்டும். அந்த சங்கிற்கு அபிஷேகம், பூஜைகள் செய்து வழிபட்டால் வாழ்வில் அனைத்து விதமான ஐஸ்வர்யங்களும் பெருகிக் கொண்டே இருக்கும்.
உப்பு
உப்பு மிக முக்கியமான மங்கள பொருளாகும். அனைத்து மங்கள நிகழ்ச்சிக்கும் முதலில் வாங்கி வைக்கும் பொருள் உப்பு தான். மகாலட்சுமி பாற்கடலில் இருந்து தோன்றியவள் என்பதால் அவளின் அருளை பெறுவதற்கு வீட்டில் உப்பு வாங்கி வைக்கலாம்.
மஞ்சள்
மஞ்சள் கிழங்கு அல்லது மஞ்சள் பொடி, மஞ்சள் கயிறு ஆகியவற்றை வீட்டில் வாங்கி வைத்து வழிபடுவது சிறப்பானதாகும்.