சபாநாயகர் பதவியை தூக்கி எறிந்த அசோக ரன்வல!
அசோக ரன்வலதனது சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அவரது கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சை நிலவிவந்த சூழ்நிலையிலேயே அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி அனுர அரசாங்கத்தில் அசோக ரன்வல சபாநாயகராக நியமிக்கபப்ட்டிருந்தார். எனினும் அவரது கல்வித்தகமை பல்வேறு சர்ச்சைகளை தோற்றியிருந்தது.
மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் இரசாயன பொறியியலில் BSc பட்டம், ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றிருப்பதாக குறிப்பிட்டு அவரது பெயருடன் கலாநிதி என்ற பிரயோகம் பயன்படுத்தப்பட்டிருந்தமை பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருந்தthu.
இவ்வாறான நிலையிலேயே சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்வதாக அசோக ரன்வல கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.