தமிழர் பகுதியில் இரவோடிரவாக பதற்றத்தை ஏற்படுத்திய யுவதி ; பரிதாமாக பறிபோன உயிர்
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி பழைய பாலத்தில் பாய்ந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த யுவதி கல்லடி பழைய பாலத்திலிருந்து பாய்ந்து நீரில் மூழ்கிய நிலையில் பிரதேச இளைஞர்களால் இரவோடிரவாக தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலையும் ஏற்பட்டது.

மேலதிக விசாரனை
பிரதேச இளைஞர்கள் மற்றும் பொலிசாரினால் மீட்கப்பட்ட யுவதி பொலிஸாரின் வாகனத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளப்பட்டுள்ளார்.
எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இளம் பெண் தாழங்குடா பகுதியை சேர்ந்த 20 வயதையுடையவர் எனவும், கடந்த வருடம் உயர்தர பரீட்சை எழுதியவர் எனவும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனையினை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.