அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றிய ஈழத்தமிழருக்கு நேர்ந்த சோகம்
ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான தம்பித்துரை முத்துக்குமாரசாமி அமெரிக்காவில் காலமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணம் திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், அமெரிக்கா நியூயோர்க் நகரில் வசித்து வந்தவருமான தம்பித்துரை முத்துக்குமாரசாமி ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவராவார்.

முன்னணிப் போராளி
1970 ஆம் ஆண்டில் போராட்ட வரலாற்றை இவரைத் தவிர்த்து எழுதிவிட முடியாது எனுமளவிற்கு முன்னணிப் போராளியாகத் திகழ்ந்தவர்.
அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமெரிக்காவின் (AIUSA ) சர்வதேச வழக்கறிஞர் பிரிவின் இயக்குநராகவும், மனித உரிமைக் கண்காணிப்பாளராகவும், உலகம் முழுவதும் உள்ள அகதிகள் முகாம்களின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
அவர் வோஷிங்டன் சட்டக் கல்லூரியின் மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் அகாடமியில் பேராசிரியராகவும் பணியாற்றினார்.
அவர் முன்னாள் ஜனாதிபதி கார்டருடன் இணைந்து உலகம் முழுவதும் தேர்தல்களைக் கண்காணித்துள்ளார் மற்றும் பிலடெல்பியாவில் தேர்தல் நீதிபதியாகப் பணியாற்றியுள்ளார்.
இத்தகைய பல்வேறு முக்கிய பல்வேறு பணிகளை ஆற்றிய தம்பித்துரை முத்துக்குமாரசாமி தொடர்பில் நோக்குகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...