நிலவின் மறுபக்கத்தை சுற்றிவந்த மனிதர்கள்; வரலாற்று சதனை!
நாசாவின் ஆர்டெமிஸ் II விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியுள்ளனர். இதன் மூலம், 50 ஆண்டுகளுக்கு பிறகு நிலவைச் சுற்றி வந்த முதல் மனித விண்வெளிப் பயணத்தை அவர்கள் நிறைவு செய்துள்ளனர்.
நாசாவின் ஆர்டெமிஸ் II விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியுள்ளனர். இதன் மூலம், 50 ஆண்டுகளுக்கு பிறகு நிலவைச் சுற்றி வந்த முதல் மனித விண்வெளிப் பயணத்தை அவர்கள் நிறைவு செய்துள்ளனர்.

நிலவின் சுற்றுப்பாதைக்கு மனிதர்கள் சென்ற முதல் பயணம்
1972-ல் அப்பல்லோ மிஷனுக்குப் பிறகு, நிலவின் சுற்றுப்பாதைக்கு மனிதர்கள் சென்ற முதல் பயணம் இதுவாகும். ஓரியன் விண்கலம், வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 5:07 மணிக்கு (00:07 GMT) கலிபோர்னியா கடற்கரைக்கு அப்பால் பசிபிக் பெருங்கடலில் விழுந்தது .

நாசா விண்வெளி வீரர்களான ரீட் வைஸ்மேன், விக்டர் குளோவர் மற்றும் கிறிஸ்டினா கோச் ஆகியோருடன், கனடிய விண்வெளி வீரர் ஜெர்மி ஹேன்சனும் அதில் பயணம் செய்தனர். பூமிக்குத் திரும்புவதற்கு முன், அவர்கள் சந்திரனின் மறுபக்கத்தைச் சுற்றிப் பயணம் செய்தனர்.