கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று இளைஞர்கள் கைது!
கொலைச் சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் நேற்று (08) வெலிக்கடை பொலிஸ் அதிகாரிகளால் ராஜகிரிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
இளைஞர்கள் கைது
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 22, 24 மற்றும் 30 வயதுடைய அகரபத்தனை, நமுனுகுல மற்றும் பன்னிலதென்ன பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் 6ஆம் திகதி, இராஜகிரியவில் உள்ள கடை ஒன்றுக்குள் அடையாளம் தெரியாத ஒருவர் விழுந்து கிடந்த நிலையில், பின்னர் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அந்த நபரின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை நேற்று முன்தினம் (07) கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியால் நடத்தப்பட்டது.
இறந்தவரின் தலையில் உட்புற இரத்தப்போக்கு இருந்ததாகவும், அவரது உடலில் காயங்கள் இருந்ததாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதன்படி, இந்த மரணம் ஒரு கொலை என்பது தெரியவந்துள்ளது.
அதன்படி, விசாரணை அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து, கொலை இடம்பெற்ற கடையில் பணியாற்றிய மூன்று ஊழியர்களை கைது செய்யதுள்ளனர். இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் வெலிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.