கனடாவில் கைது... அமெரிக்காவில் விசாரணை; கதை அளந்துவிடும் சீமான்!
மதுரையில் நடந்த நினைவேந்தல் கூட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ,அமெரிக்காவில் தன்னிடம் விசாரணை நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுப் பேசியுள்ளமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
சமீபத்தில் மதுரையில் பேசிய சீமான், அமெரிக்கா சென்றபோது விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு தன்னிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், அங்கு அதிகாரிகள் தன்னை "பாஸ்" (Boss) என்று அழைத்ததாகவும் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.

அளந்துவிடும் கதைகள்
அத்துடன் தன்னிடம் முறையான விசா இருந்தபோதிலும் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு அதிகாரிகள் கேள்வி எழுப்பியதாகவும் சீமான தெரிவித்தார் .
அதேவேளை 2009-ஆம் ஆண்டு கனடாவில் நடைபெற்ற தமிழ் சமூகக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றபோது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாகக் கூறி கனடா எல்லைச் சேவை முகமை (CBSA) அதிகாரிகளால் அவர் காவலில் வைக்கப்பட்டு பின்னர் நாடு கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை கடந்த காலங்களில் மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு பெற்ற நபராக இருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்போது அவரது அளந்துவிடும் கதைகளால் கடுமையாக விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.