வவுனியாவில் யுவதிக்கு துணைபோனதால் கைதான இளைஞர்கள்!
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள தனியார் பற் சிகிச்சை நிலையத்தில் யுவதி ஒருவருடன் சென்று குழப்பம் விளைவித்த இரு இளைஞர்கள் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. சம்பவம்ம்தொடர்பில் தெரியவருகையில்,
வவுனியா, வைரவபுளியங்குளம், வைரவகோவில் வீதியில் உள்ள தனியார் பற் சிகிச்சை நிலையத்திற்கு யுவதி ஒருவர் சென்றுள்ளார்.
இதன்போது அங்குள்ள நடைமுறை பற்றி கூறிய போது வைத்தியசாலையில் கடமையில் இருந்த பணியாளர்களும் குறித்த யுவதிக்கும் இடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த வைத்தியசாலை வைத்தியரும் அங்கு வந்து யுவதியுடன் உரையாடிய போது முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன்போது கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதையடுத்து அங்கிருந்து சென்ற யுவதி தனது உறவினர்களான இளைஞர்கள் இருவரை அழைத்து வந்து தகராற்றில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து குறித்த தனியார் பற்சிகிச்சை நிலைய வைத்தியர் வவுனியா பொலிசாருக்கு அறிவித்தையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் 24 மற்றும் 25 வயதுடைய தவசிகுளம் பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கைளை கைது செய்துள்ளனர்.
மேலும் கைதானவர்களிடம் அவர்களின் விசாரணைகளை மேற்கொண்ட பின் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.