டயனா கமகேவுக்கு எதிராக பிடியாணை; திரும்ப பெற்ற நீதிமன்றம்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு எதிராகக் கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு தலைமை நீதவான் இன்று (06) காலை இந்தப் பிடியாணையைப் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
பிடியாணைகளை திரும்பப் பெற உத்தரவு
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை கைது செய்து ஆஜர்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளை திரும்பப் பெற கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டயானா கமகே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து ஆஜரானதை அடுத்து, கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் பிடியாணையை திரும்பப் பெற உத்தரவிட்டது.