தெமட்டகொட சமிலவின் சகா அதிரடி கைது ; பொலிஸார் மீது தாக்குதல்
தெமட்டகொட சமிலவின் ஆதரவாளரென சந்தேகிக்கப்படும், பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் 5 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நாவலப்பிட்டி பொலிஸாரால் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதுக்கை பிரதேசத்தில் வசிக்கும் குறித்த சந்தேகநபர் நாவலப்பிட்டி, பல்லேகம பகுதியில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலுக்கமைய, நாவலப்பிட்டி பொலிஸ் உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதி
இருப்பினும், சந்தேகநபரை கைது செய்ய முற்பட்ட வேளையில் அவர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மகனுடன் சேர்ந்து கணவனுக்கு முதல் மனைவி நிகழ்த்திய கொடூரம் ; காருக்குள் எரிந்து கிடந்த குடும்பம் ; சிறுவனின் பகீர் தகவல்
சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.