தமிழர் பகுதியில் குடும்ப பெண்ணின் உயிரை பறித்த சம்பவம் ; பொலிஸார் விசாரணை
தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தளாய் - திருகோணமலை வீதியின் வவுல்பாலம் அருகில், இடம்பெற்ற விபத்தில் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கந்தளாயில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கம் காரணமாக, முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி பஸ் தரிப்பிட அமைப்புடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

மேலதிக விசாரணை
இந்த விபத்தில் காயமடைந்த ஓட்டுநரும், பின் இருக்கையில் பயணித்த மூன்று பெண்களும் காயமடைந்து தம்பலகாமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், அவர்கள் ஒரு பெண் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கல்மெட்டியாவ பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய வயோதிப பெண் என தெரியவந்துள்ளது.
மகனுடன் சேர்ந்து கணவனுக்கு முதல் மனைவி நிகழ்த்திய கொடூரம் ; காருக்குள் எரிந்து கிடந்த குடும்பம் ; சிறுவனின் பகீர் தகவல்
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளில் தம்பலகாமம் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.