பாதுகாப்புக்காக வாள் வைத்திருக்கிறாராம் அர்ச்சுனா
தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், அரசாங்கம் தனக்கு பாதுகாப்பு வழங்காததால், தனது சொந்த பாதுகாப்பிற்காக ஒரு வாளை வைத்திருப்பதாகவும், இது குறித்து நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் காவல்துறை மா அதிபருக்கு அறிவித்துள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால், இதற்கு முன்னர் இரண்டு முறை எழுத்துப்பூர்வமாக பாதுகாப்பு கோரியதாகவும், ஆனால் அரசாங்கத்திடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டுகிறார்.

தனது சொந்த பாதுகாப்பிற்காக ஒரு துப்பாக்கியைக் கோரியதாகவும், ஆனால் அதற்கும் அரசாங்கத்திடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கூறுகிறார்.
எனவே தனது சொந்த பாதுகாப்புக்காக வாளை வைத்திருப்பதாகவும், அதை எப்போதும் தனது சிற்றூந்தில் வைத்திருப்பதாகவும் அர்ச்சுனா குறிப்பிட்டார்.