முடிக்கு ஹேர் டை பயன்படுத்துபவர்களா நீங்கள்? உங்களுக்கான எச்சரிக்கை தகவல்
ஹேர் டை வாங்கி தலையில் பயன்படுத்தும் மக்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவலை மருத்துவர் பைரவி என்பவர் வெளியிட்டுள்ளார்.
30 வயதிலேயே நரை முடிகள் வருவதால் பலரும் ஹேர் டையை இளம் வயதிலேயே பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். ஹேர் டை ஆபத்து இல்லை என்றாலும் செயற்கையான முறையில் கெமிக்கல் நிறைந்த ஹேர் டை பயன்படுத்துவது ஆபத்து என தோல் மருத்துவர் பைரவி கூறியுள்ளார்.
இந்த கெமிக்கல் நிறைந்த ஹேர் டை பல விதமான பாதிப்புகளை உண்டாக்கும் என்கிறார். ஏனெனில் இந்த பாக்கெட் ஹேர் டைகளில் அமோனியா மற்றும் பாராபெனிலெனிடமைன் (PPD ) என்னும் இரு வகையான ஆபத்து நிறைந்த கெமிக்கலை பயன்படுத்துகின்றனர்.
எனவே அதை தொடர்ச்சியாக பயன்படுத்துவதால் நரை முடி கூடுதலாக உருவாகுதல், தலைமுடி உதிர்வு, தலைமுடி உடைதல், முடி வளர்ச்சி குறைதல் இப்படி தலைமுடி பிரச்னைகளை சந்திப்பீர்கள் என்கிறார்.
அதுமட்டுமன்றி முகக் கருமை, இளமையிலேயே வயதான தோற்றம் ,சரும அலர்ஜி போன்ற சரும பாதிப்புகளையும் உண்டாக்கும் என்கிறார். ஒரு கட்டத்தில் இந்த கெமிக்கல்கள் உங்களுக்கு புற்றுநோயை கூட உண்டாக்கும் என மருத்துவர் பைரவி அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளார்.
எனவே ஹேர் டை வாங்கும் முன் இந்த இரண்டு கெமிக்கல்களும் இருக்கிறதா என பார்த்து வாங்குங்கள். இல்லையெனில் சிறந்த வழியாக இயற்கையான முறையில் மருதாணி, கறிவேப்பிலை , காஃபி தூள் , டீ தூள் கொதிக்க வைத்த தண்ணீர் போன்ற வழிகளை பின்பற்றுங்கள்.
முக்கியமாக அரைத்து விற்கப்படும் மருதாணி பொடிகளையும் வாங்காதீர்கள். அதிலும் பிபிடி கெமிக்கல் கலப்படம் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே நீங்களே அரைத்து பயன்படுத்துவது நல்லது என்கிறார்.