வெற்றிலை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
வெற்றிலை ஒரு மருத்துவ மூலிகையாகும். வெற்றிலை பசியை தூண்டக் கூடியது. வயிற்றுக் கோளாறு நீக்க, அஜீரணத்தை போக்க வெற்றிலை பயன்படுத்தலாம்.
பொதுவாக இருமல் - சளி, ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலர்ஜி, வாத நோய், நுரையீரல் மற்றும் அல்சர் போன்ற நோய்களை போக்கக்கூடிய மருத்துவ குணங்கள் கொண்டது வெற்றிலை.
வெற்றிலையுடன் பாக்கு சேர்த்து சாப்பிட்டு வந்தால் பல்வேறுபட்ட நோய்கள் நீங்கும்.
வெற்றிலை உடன் பாக்கு குறைவாகவும், சுண்ணாம்பு சிறிது அதிகமாகவும் சேர்த்து சாப்பிட்டால் பசி எடுக்காதவர்களுக்கு பசி எடுக்கும்.
சளி, இருமல் குணமாகும்
ஒரு வெற்றிலையினுள் ஐந்தாறு துளசி இலைகளை வைத்து சிறிது கசக்கிப் பிழிய வருகின்ற சாற்றினை குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி, இருமல் குணமாகும்.
மலச்சிக்கலுக்கு மருந்தாகும்
வெற்றிலை ஆன்டிஆக்ஸிடன்ட்களின் மையமாக இருக்கும் வெற்றிலை, ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து உடலை பாதுகாக்கிறது. வெற்றிலை நீரை தொடர்ந்து குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.
சுவாச பிரச்சனைகளை போக்கும்
சுவாச பிரச்சனைகளை போக்கும் வெற்றிலை நீர் சுவாச பிரச்சனைகளை போக்க வெற்றிலையை சாறு எடுத்து குடிக்கலாம். இருமல் மற்றும் சளிக்கு நல்ல மருந்தாகும் இது, நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை வெளியேற்றும். ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களும் வெற்றிலை சாறு குடித்து வருவது நல்லது.
வாய் துர்நாற்றத்தை குறைக்கும்
வெற்றிலை நீர் வெற்றிலை நீரை தொடர்ந்து குடித்து வந்தால் வாய் துர்நாற்றம் குறையும். வெற்றிலையில் உள்ள ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் வாயில் வளரும் பாக்டீரியாவை அழிக்கும். பற்குழி, பல் சிதைவு போன்ற பிரச்சனைகளையும் இது குறைக்கும்.
மூட்டு வலியிலிருந்து நிவாரணம்
வெற்றிலை நீர் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் வழங்கும். அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ள வெற்றிலையைப் பயன்படுத்தி, ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் முடக்கு வாதத்தால் ஏற்படும் அசௌகரியம் மற்றும் வலிகளையும் குறைக்கலாம்.