யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை தொடர்பில் அர்ச்சுனாவின் கருத்து
நாட்டில், கண்சத்திர சிகிச்சைகளை உடனடியாக மேற்கொள்ளும் மருத்துவமனையாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திகழ்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவிக்கின்றார்.
கண் சுகாதாரம் தொடர்பான தேசிய கொள்கை திட்டத்தினை மேம்படுத்துவதற்கான, ஒத்திவைப்பு வேளை பிரேரணையை நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் கண் சத்திர சிகிச்சை நிபுணர் முத்துசாமி மலரவன் தலைமையேற்று கண் தொடர்பான சத்திர சிகிச்சைகளை விரைவுபடுத்தி வருவதாகவும், குறித்த பிரேரணையில் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி கண்சுகாதாரம் தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என அர்ச்சுனா இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.