இலங்கையின் வான்பரப்பில் வெளிநாட்டு போர் விமானங்கள்? விமானப்படை வெளியிட்ட முக்கிய தகவல்
இலங்கையின் வான்பரப்பில் வெளிநாட்டு இராணுவ வானூர்திகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் உண்மையில்லை என விமானப்படை விளக்கமளித்துள்ளது.
தற்போது வான்பரப்பில் காணப்படும் மேலதிக விமான பறப்புக்கள் அனைத்தும் விமானப் படையின் 75ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டங்களுக்காக முன்னெடுக்கப்படும் உள்நாட்டு ஒத்திகைகளே என்று வான்படை தெரிவித்துள்ளது.

தெளிவுபடுத்தல்
ஈரான் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து எழுந்த பொதுமக்களின் அச்சத்தைத் தணிக்கும் வகையில் இந்தத் தெளிவுபடுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இலங்கை வான்படையின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மார்ச் 2 ஆம் திகதியன்று கட்டுநாயக்க வான்படை தளத்தில் பிரதான அணிவகுப்பு நடைபெறும்.
மார்ச் 6 முதல் 8ஆம் திகதிவரை, இரத்மலானை வான்படை தளத்தில் பொதுமக்கள் கண்டுகளிக்கக்கூடிய வான்வழி சாகசங்கள் மற்றும் வானூர்தி கண்காட்சிகள் இடம்பெறும் என்று இலங்கை விமான படை அறிவித்துள்ளது.