பொலிசாரை திட்டிய அருச்சுனா எம்.பிக்கு சிக்கல்!
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, கொழும்பில் பாதையில் வாகனம் நிறுத்திய நிலையில் , அது தொடர்பில் வினவிய பொலிசாரிடம் தகாத வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி மீதுதவறான வார்த்தை பிரயோகம் மேற்கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமாரகே நேற்று (25) உத்தரவிட்டார்.
நீதிமன்றில் கிடுக்குபிடி
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோட்டை பொலிஸ் அதிகாரி ஒருவரின் கடமைகளில் தலையிட்டதாக கூறி, பொலிஸார் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர், நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தை மீறியதாகவும் கூறி, கோட்டை பொலிஸார் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஒரு பி அறிக்கையை சமர்ப்பித்தனர்.
சம்பவ இடத்தில் நடந்த வீடியோ காட்சிகளைப் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி ஊடகங்களுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு செய்யப்பட்ட கோரிக்கைக்கு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமாரகே அனுமதி வழங்கினார்.