ஜனாதிபதி அநுரவின் மற்றுமொரு நெகிழ்ச்சி செயல்! (காணொளி)
ஜனாதிபதி அநுரவின் மற்றுமொரு நெகிழ்ச்சி செயல் குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க , மக்களிடம் அன்னிநியோன்யமாக பழககூடிய ஒருவர் ஆவார்.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளிடம் இருந்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வேறுபட்டு நிற்கின்றார். தனது எளிமையாலும், இயல்பாக பழகும் குணத்தினாலும் மக்கள் மனைதில் ஜனாதிபதி அனுர குமார இடம்பிடித்து நிற்கின்றார்.

அந்தவகையில் காரில் சென்றுகொண்டிருந்த ஜனாதிபதி அனுர, தனது நண்பர் ஒருவர் வீதியின் நின்றதை கண்டு, நண்பர் பெயரை கூறி அழைத்து கைகுலுக்கி பேசும் காணொளி வெளியாகியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளோ, அல்லது அரச பதவிகளில் இருப்பவர்களோ தமக்கு தெரிந்தவர்களையோ அல்லது உறவினர்கள் , நண்பர்கள் என கண்டாலோ கண்டும் காணாததுபோல சென்றுவிடுபவர்களே இக் காலகட்டத்தில் அதிகம். அந்தவகையில் ஜனாதிபதி அனுர போன்று இவ்வாறு நடந்துகொள்பவர்கள் மிக சிலரே என சமூகவலைத்தளவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.