ஓமைக்ரோனை தொடர்ந்து மற்றுமொரு புதிய வைரஸ் கண்டுபிடிப்பு; அச்சத்தை ஏற்படுத்திய தகவல்
டெல்டா பரவல் ஓய்ந்த நிலையில், ஓமைக்ரோன் என்ற புதிய வகை வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் புதிய வைரஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாபிரிக்காவில் அடையளங்காணப்பட்ட ஓமைக்ரோன் தொற்றானது பெரிய அளவில் உயிரிழப்புகளை ஏற்படுத்தாவிட்டாலும் கூட பல மடங்கு வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் சைப்ரஸ் நாட்டில் டெல்டாகுரோன் (Deltacron) என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
டெல்டா மற்றும் ஒமைக்ரோன் ஆகிய இரு வைரஸ்களின் திரிபாக இதை விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இப் புதிய வகை வைரஸால் 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக மேலும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படும் அதேவேளை, இதன் பரவல் விகிதம் உள்ளிட்ட பிற விவரங்கள் எதுவும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.