யாழில் இராணுவ கட்டுப்பாட்டிருந்த மற்றுமொரு இடமும் விடுவிப்பு; மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்!
யாழ்ப்பாணம் அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைமை காரியாலய கட்டடம் மற்றும் அதனை சூழவிருந்த சுமார் 08 பரப்பு காணி இன்றைய தினம் (10) இராணுவத்தினரால் விடுக்கப்பட்டுள்ளது .
சுமார் 30 வருட காலத்திற்கு மேலாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த காணி மற்றும் அதனுள் இருந்த கட்டடம் என்பவற்றை வலி கிழக்கு பிரதேச செயலரிடம் இராணுவத்தினர் இன்று உத்தியோகபூர்வமாக கையளித்தனர்.
அனுர அசாங்கத்தால் மக்கள் மகிழ்ச்சி
இந் நிலையில் , பிரதேச செயலரினால் அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு சங்க பொது முகாமையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது .
அதேவேளை அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைமை காரியாலயம் இதுவரை காலமும் மாற்றிடம் ஒன்றில் இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை ஜனாதிபதி அனுர குமார அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் , வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் இருந்த காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றமை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.