இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
முகாமைத்துவ சேவைகள் அதிகாரி சேவையின் தரம் III க்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டித் தேர்வு - 2024 (2025) ஒக்டோபர் 05 ஆம் திகதி நாடு முழுவதும் நடைபெறும் என்று இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்தத் தேர்வுக்கான பொருத்தமான நுழைவுச் சீட்டுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.doenets.lk இலிருந்து பதிவிறக்கம் செய்ய முடியும் என தெரிவித்துள்ளது.
மேலதிக தகவல்கள்
மேலும், இந்தத் தேர்வு தொடர்பாக ஏதேனும் கேள்விகள் இருந்தால், இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் நிறுவனப் பரீட்சைகள் அமைப்புக் கிளையை பின்வரும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, விண்ணப்பதாரர்கள் 011-2785230 / 011-3661244 / 011-3661246 என்ற தொலைபேசி எண்கள் மற்றும் forex@sitnet.lk என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் ஏதேனும் தொடர்புக் கொண்டு மேலதிக தகவல்களை பெற்றுகொள்ள முடியும் என இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.