சுற்றுலா விடுதியில் தீக்காயங்களுடன் உயிரிழந்து கிடந்த அமெரிக்க பிரஜை!
தங்காலை நகுலகமுவ பிரதேசத்திலுள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் அமெரிக்க பிரஜை ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 54 வயதுடைய குறித்த நபரின் சடலம் நேற்று தீக்காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவருக்கு உணவு கொண்டு வரும் பெண்ணொருவரே குறித்த சடலத்தை கண்டுள்ளார். இதேவேளை உயிரிழந்தவர் சில காலமாக குறிப்பிட்ட மருந்தொன்றை பயன்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் உயிரிழந்தவரின் தாயாரே சடலத்தை அடையாளம் காட்டியுள்ளார். இதேவேளை கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் உனகுருவாவில் அவருடன் வசித்து வந்த தாய் ஆறு மாதங்களாக தனியாக வசித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.