இலங்கையில் பல பகுதிகளுக்கு ‘ஆம்பர்’ வெள்ள அபாய எச்சரிக்கை!
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு நீர்ப்பாசன திணைக்களம் இன்று (மே 14) ஆம்பர் வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட திணைக்களம், அண்மைக்காலமாக பெய்துவரும் கடும் மழை காரணமாக நிலவல ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், கொட்டபொல, பிடபெத்தர, அக்குரஸ்ஸ, அத்துரலிய, மாலிம்படை, திஹாகொட, மாத்தறை மற்றும் தெவிநுவர பிரதேச செயலகப் பிரிவுகள் உட்பட நிலாவல ஆற்றின் பல தாழ்நிலப் பிரதேசங்களில் பாரிய வெள்ள நிலைமை ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, அனைத்து பிரதேச மக்களும் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு கோரப்பட்டுள்ளதுடன், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளும் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.