வடக்கு விஜயம் ; புலனாய்வு அதிகாரிகளுக்கு தண்ணிகாட்டிய ஜனாதிபதி அனுர!
ஜனாதிபதி அநுரகுமார யாழ்ப்பாணத்துக்கு நேற்று (1) வந்திருந்த நிலையில், அவர் எங்கு தங்கியிருந்தார் என்கின்ற விடயம் புலனாய்வு அதிகாரிகள் உட்பட அரச பெருந்தலைகள் எவருக்கும் தெரியாமல் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி அநுர யாழ்ப்பாணத்துக்கு நேற்றைய தினம் பயணம் மேற்கொண்டார். அவரது பயணத்தின்போது, முதலாவது நிகழ்வாக காலை 10 மணிக்கு மயிலிட்டித் துறைமுக அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைப்பதாக இருந்தது.
வாகனத் தொடரணியும் இல்லாமல் பிரசன்னமான ஜனாதிபதி
ஜனாதிபதியின் பயணத்தை முன்னிட்டு புலனாய்வாளர்கள் உச்சக்கட்டக் கண்காணிப்பைச் செலுத்தியிருந்த போதும் , 31ஆம் திகதி நள்ளிரவே ஜனாதிபதி இராணுவக் காவலரண்களை தாண்டிவிட்டார் என்ற தகவல் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்துள்ளது.
எனினும், யாழ்ப்பாணத்துக்குள் ஜனாதிபதி நுழைந்துவிட்டாரா? அவர் எங்கு சென்றார்? என்று புலனாய்வு அதிகாரிகளுக்கு தொடர்ச்சியாக அறியமுடியவில்லை.
இந்த விடயங்கள் தொடர்பில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெரியாத நிலையில் நேற்று அதிகாலை பாதுகாப்பு வட்டாரங்களிலும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடத்திலும் பெரும் பரப்ரப்பு ஏற்பட்டுள்ளது.
அதன் பின்னர் மயிலிட்டித் துறைமுக அபிவிருத்திப் பணிகளுக்காக எந்த வாகனத் தொடரணியும் இல்லாமல் தனி வாகனத்தில் ஜனாதிபதி சென்று இறங்கியபோதே, ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் தான் தங்கியிருந்தார் என்ற விடயம் புலனாய்வு அதிகாரிகளுக்கும் அரச வட்டாரங்களுக்கும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது