பறவை மோதியதில் அவசரமாக தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்
இந்தியாவின் நாக்பூரில் இருந்து கொல்கத்தாவுக்குப் புறப்பட்ட இண்டிகோ விமானம் பறவை மோதியதில் நாக்பூர் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவுக்கு 165 பயணிகளுடன் இண்டிகோ விமானம் புறப்பட்டது.
பயணிகள் அவதி
விமானம் புறப்பட்டு நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, விமானத்தின் மீது பறவைகள் மோதின.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் மீண்டும் அவசர அவசரமாக நாக்பூர் விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது.
அதன்பின்னர் விமானம் ரத்து செய்யப்பட்டதனால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். இதனையடுத்து பயணிகளை மாற்று விமானம் மூலம் கொல்கத்தாவிற்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.