அமெரிக்க தூதுவரை சந்தித்த இந்தியா, அவுஸ்திரேலிய, ஜப்பான் தூதுவர்கள்
இந்தியா, அவுஸ்திரேலிய, ஜப்பான் தூதுவர்கள் இன்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலிசங்கை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் இதனை தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இலங்கையிலும் பிராந்தியத்திலும் பரஸ்பர அக்கறைக்குரிய விடயங்கள் குறித்த பேச்சுவார்த்தைகளிற்காக புதிய தூதரகத்திற்கு அவுஸ்திரேலிய இந்திய ஜப்பான் தூதரகங்களை சேர்ந்த எனது சகாக்களை வரவேற்று மகிழ்ச்சியடைந்தேன் என அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்களிற்கான எமது உறுதிப்பாட்டை பகிர்ந்துகொள்ளும் பிராந்திய பங்காளிகளின் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பு நான் நன்றியுள்ளவனாக உள்ளேன் எனவும் அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.