திவாலாகும் அம்பானி ; கைநழுவிப்போன நிறுவனம்!
திவால் நிலையில் உள்ள இந்திய பெரும் பணக்காரர் அம்பானியின் ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனம், ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கேபிட்டல் நிறுவனம் நிகர லாபமாக ஈட்டி வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சரிவை சந்தித்தன. அதாவது திவால் ஆகும் நிலைக்கு தள்ளப்பட்டது.
இந்த நிலையில், 81 ஆயிரத்து116 கோடி ரூபாய் கடன் சுமையில் சிக்கி, திவால் நிலையில் தள்ளாடி வரும் ரிலையன்ஸ் கேபிட்டல் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவை ரிசர்வ் வங்கி கலைத்து விட்டு, ஒரு புதிய நிர்வாகியை நியமித்துள்ளது.
அத்துடன் ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்தின் சேர்மன் பதவியில் இருந்து அனில் அம்பானியை நீக்கியுள்ளது. ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்தின் நிர்வாகியாக, பேங்க் ஆப் மகாராஷ்டிராவின் முன்னாள் நிர்வாக இயக்குனர் நாகேஸ்வர் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் விரைவில் ரிலையன்ஸ் கேபிட்டல் நிறுவனம், திவால் சட்டத்தின் கீழ் திவால் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்தியாவில் சமீப காலங்களில் திவால் சட்டத்தின் கீழ் கையகப்படுத்துப்பட்டுள்ள மூன்றாவது தனியார் நிதி நிறுவனம் இதுவாகும்.
இதேபோன்று அண்மையில் திவான் ஹவுஸிங் பைனான்ஸ் நிறுவனம் கையகப்படுத்தப்பட்டு பின்னர் விற்பனை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.