மதுபோதையில் முத்தமிட வந்தவருக்கு இறுதியில் ட்விஸ்ட் கொடுத்த யானை ; இலங்கையில் சம்பவம்
ஓப்பநாயக்க, கல்கந்த பிரதேசத்தில் 41 வயதுடைய ஒருவர், சங்கிலியால் கட்டப்பட்டிருந்த யானையை மதுபோதையில் முத்தமிடச் சென்றபோது, யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.
மரக்கட்டைகளை இழுக்கும் பணிகளுக்காக அப்பகுதிக்கு கொண்டுவரப்பட்டிருந்த யானையால் குறித்த நபர் தாக்கப்பட்டதாகவும், இதில் பலத்த காயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பகட்ட விசாரணைகள்
யானை பாதுகாப்பாகக் கட்டப்பட்டிருந்த வேளையில், உயிரிழந்த நபர் எந்த அனுமதியுமின்றி யானைக்கு அருகில் சென்றுள்ளார்.
அப்போது முத்தமிட முயன்றதாகவும், அந்த நேரத்தில் கோபமடைந்த யானை அவரைத் தாக்கி மிதித்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன் போது குறித்த நபர் கடுமையாக மது அருந்தியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
தரையிறங்கும் போது தொழிற்படாத விமானத்தின் முன்புற சக்கரம் ; விமானியின் சாமர்த்தியத்தால் தப்பிய 133 உயிர்கள்
சம்பவம் தொடர்பான ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகள் ஓப்பநாயக்க பொலிஸ் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டன.
பிரேத பரிசோதனை நடவடிக்கைகளுக்காக சடலம் கஹவத்த ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.