அழகு நிலையம் சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி; பெண்களே அவதானம்
மினுவாங்கொடையில் தனது தலைமுடியை அலங்காரம் செய்துகொண்ட பெண்ணொருவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு, நஞ்சாகி, பெண்ணின் தலைமுடி கடுமையாக உதிர்வடைந்ததை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விருந்தொன்றில் கலந்துகொள்வதற்காக அழகுநிலையம் சென்ற பெண்ணொருவர் தலைக்கு செலுத்தப்பட்ட பொருட்களால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக கம்பஹா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
மினுவாங்கொடை, பொரகொட வத்த பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய இந்த திருமணமான பெண், மினுவாங்கொடை பேருந்து நிலையத்திற்கு முன்பாக உள்ள அழகு நிலையமொன்றிற்கு முடியை அலங்கரிப்பதற்காக சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். .
அன்கு தலைமுடியை அழகுபடுத்த சில ஹேர் ஸ்டைலிங் பொருட்களை தடவியுள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த பெண் தனது தலையில் வீக்கத்தால் அசௌகரியமாக உணர ஆரம்பித்தார், தனக்கு ஏற்பட்ட ஒவ்வாமையை தெரிவித்துள்ளார்.
பின்னர், இரண்டு பெண்களும் அந்த பெண்ணின் தலையை கழுவி துடைத்துள்ளனர், ஆனால் கடுமையான வீக்கம் காரணமாக, பெண் அவரது தலையை தொட்டபோது, அவரது முடி முற்றிலும் உதிர்ந்து விட்டது.
அதன் பின்னர் பாதிக்கப்பட்டபெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்