2026ம் ஆண்டு பூமிக்கு வரும் ஏலியன்கள்; பாபா வாங்கா கணிப்பு உண்மையாகுமா!
2026ம் ஆண்டு நவம்பர் மாதம் மிகப்பெரிய விண்கலம் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழையும் என்றும் அப்போது மனிதர்களுக்கும், ஏலியன்களுக்கும் இடையிலான தொடர்பு வெளிப்படும் என பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வங்கா கணித்துள்ளதாக கூறப்படுகின்றமை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சமீபகாலமாக விண்வெளியில் நிகழும் மாற்றங்கள் ஏலியன்கள் குறித்த பேச்சை அதிகரித்துள்ளது. அதாவது சூரிய குடும்பத்திற்குள் நுழைந்துள்ள '3I/ATLAS' என்ற விண்கல் விசித்திரமான முறையில் செயல்படுவதாக கூறப்படும் நிலையில், விஞ்ஞானிகள் கவனித்து வருகின்றனர்.

விண்கல்லா? ஏலியன்களின் உளவு வாகனமா?
இது ஒரு விண்கல் தானா? இல்லை ஏலியன்களின் உளவு வாகனமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. வேற்றுக்கிரகவாசிகள் என்று அழைக்கப்படும் ஏலியன்கள் இருக்கிறார்களா? இல்லையா? அவர்கள் பூமிக்கு வருவார்களா? என்பது நீண்டகாலமாக ஒரு பேசுபொருளாக இருந்து வருகிறது.
நமது பூமிக்கு வெளியே இருக்கும் பிற கோள்களிலோ அல்லது விண்வெளியின் பிற பகுதிகளிலோ ஏலியன்கள் இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. எனினும் இதற்கு நம்பகமான ஆதாரம் இல்லை.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் ஏலியன்கள் மற்றும் பறக்கும் தட்டுகள் தொடர்பான ரகசிய கோப்புகளை வெளியிட உத்தரவிட்டுள்ளது ஏலியன்கள் குறித்த பேச்சை அதிகரித்துள்ளது.
2026ம் ஆண்டு நவம்பர் மாதம் பூமிக்கு வரும் ஏலியன்கள்
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் 'பாபா வங்கா' ஏலியன்கள் குறித்து முன்பே கணித்தது தான். அதாவது 2026ம் ஆண்டு நவம்பர் மாதம் மிகப்பெரிய விண்கலம் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழையும் என அவர் கணித்துள்ளதாக கூறப்படுகின்றது.
அதேவேளை இளமையில் கண்பார்வை பறிபோன பாபா வங்கா 1911 ஜனவரி 31 அன்று பல்கேரியாவில் பிறந்தார், 1996 ஆகஸ்ட் 11 அன்று இறந்தார்.

இந்நிலையில் 1970களின் பிற்பகுதியிலும் 1980களிலும் கிழக்கு ஐரோப்பாவில் அவரது தெளிவுத்திறன் மற்றும் முன்னறிவிப்புத் திறன்களுக்காக அவர் பரவலாக அறியப்பட்டார். அவர் பல தசாப்தங்களுக்கு முன்பே கணிப்புகளைச் செய்துள்ளார்.
அதேசமயம் பாபா வங்க கணித்த 2001 அமெரிக்கா இரட்டை கோபுர தாக்குதல், கொரோனோ வைரஸ் ஆகியவை உண்மையில் நடந்துள்ள நிலையில், தற்போது ஏலியன்கள் தொடர்பில் அவர் கணித்திருப்பது உலகை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.