ஒரு மணிநேர சேவைக்கு 7,000 ரூபா ; பாலியல் விடுதியில் சிக்கிய மருத்துவர்
முல்லேரியா காவல் பிரிவிற்குட்பட்ட அம்பத்தல பகுதியில் ஹோமியோபதி சிகிச்சை நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த பாலியல் விடுதி ஒன்றை மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் முற்றுகையிட்டுள்ளனர்.
சுற்றிவளைப்பின் போது மூன்று சந்தேகநபர்களும், விடுதி நிலையத்தின் உரிமையாளர் ஹோமியோபதி மருத்துவர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஒரு மணிநேர சேவைகளுக்காக 7,000 ரூபா
மருத்துவ சிகிச்சை வழங்குவதாகக் கூறி, அதன் மறைவில் பாலியல் சேவைகள் வழங்கப்பட்டு வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இங்கு ஒரு மணிநேர பாலியல் சேவைகளுக்காக வாடிக்கையாளர்களிடம் 7,000 ரூபா அறவிடப்பட்டுள்ளது.
மேல் மாகாண குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர், பிரதிப் காவல்துறை மாஅதிபர் சமந்த விஜேசேகர மற்றும் உதவிப் காவல்துறை அத்தியட்சகர் ஜனக குமார ஆகியோரின் மேற்பார்வையில், காவல்துறை பரிசோதகர் சுமித் ஜயசிங்கவின் ஆலோசனையின் பேரில் முற்றுகையிட்டுள்ளனர்.
உப காவல்துறை பரிசோதகர் பாஸ்நாயக்க தலைமையிலான குழுவில் பெண் காவல்துறை உத்தியோகத்தர்கள் உட்பட பல அதிகாரிகள் இந்தச் சுற்றிவளைப்பில் பங்கேற்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முல்லேரியா காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.