14 வயதுச் சிறுவனின் மர்ம மரணத்தின் பின்னணியில் மதுபோதையா? பிரதேச மக்கள் குற்றச்சாட்டு
கேகாலை - தெரணியகல நூரித் தோட்டத்தில், 14 வயதுடைய சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இன்று (06) அப்பகுதி மக்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
சட்டவிரோத சட்டவிரோத மதுபான விற்பனையே இந்த உயிரிழப்புக்குக் காரணம் என தெரிவித்து, அதற்கு நீதி கோரி இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கடந்த 2ஆம் திகதி நூரித் தோட்டத்தில் 14 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்தார்.
குறித்த சிறுவனின் பெற்றோர் மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்றும், அவர்களது அதீத மதுபோதையே சிறுவனின் மர்ம மரணத்திற்கு நேரடி அல்லது மறைமுகக் காரணியாக அமைந்திருப்பதாகவும் பிரதேச மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தோட்டத்தில் தாராளமாகக் கிடைக்கும் சட்டவிரோத மதுபானம் காரணமாகப் பல குடும்பங்கள் சீரழிந்துள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.