சாரதி அனுமதிப்பத்திர விநியோகம் சீரமைப்புப் பணிகள் தீவிரம்
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஹம்பாந்தோட்டை மாவட்ட அலுவலகத்தில் முன்னெடுக்கப்படும் தினசரி சாரதி அனுமதிப்பத்திர விநியோக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை நிர்வாக வளாகத்தில் ஏற்பட்ட தொலைபேசி இணைப்பு கோளாறு காரணமாக இந்த தடை ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட தொலைபேசி இணைப்புகளை சீரமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சீரமைப்பு பணிகள் நிறைவடைந்தவுடன், நிகழ்நிலை மூலமான சாரதி அனுமதிப்பத்திர விநியோக நடைமுறை உடனடியாக மீள ஆரம்பிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சேவைகள் வழமைக்குத் திரும்பும் வரை பொதுமக்கள் பொறுமையுடன் இருக்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.