குப்பைகளால் நாறும் திருகோணமலை அலஸ்தோட்டம்!
திருகோணமலை அலஸ்தோட்டம் கடற்கரைப் பகுதியில் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள் அகற்றப்படாமையினால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலை பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களுள் ஒன்றகும். அதேவேளை சுற்றுலாத்துறையின் மூலம் பெருமளவான வருமானத்தை ஈட்டி வருகின்றது.

முறையான வகையில் கடற்கரை சுத்தப்படுத்தப்படவில்லை
இந்நிலையில் திருகோணமலையில் சுற்றுலாப்பயணிகள் தங்கியிருக்கின்ற, நடமாடுகின்ற பகுதிகளில் பெருமளவானவை அசுத்தமான நிலையிலேயே காணப்படுகின்றது.
அலஸ்தோட்டம் கடற்கரைப் பகுதியில் காணப்படுகின்ற பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள் ஒழுங்கு முறையில் அகற்றப்படாமல் உள்ளசாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் பட்டிணமும் சூழலும் பிரதேச சபை உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த திணைக்களங்களினால் முறையான வகையில் கடற்கரை சுத்தப்படுத்தப்படவில்லை எனவும் தன்னார்வ தொண்டர்களின் ஒத்துழைப்புடன் சுத்தப்படுத்தி சேகரித்து வைக்கப்படுகின்ற கழிவுப் பொருட்கள்கூட அகற்றப்படுவதில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே திருகோணமலை கடற்கரைப் பகுதிகளை சுத்தமாக பேணுவதற்குரிய நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட தரப்பினர் மேற்கொள்ள வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.