இலங்கை – தாய்லாந்து இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்!
2024 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்படவுள்ள இலங்கை – தாய்லாந்து இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் நான்காம் சுற்றுப் பேச்சுவார்த்தை கடந்த 27 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமானது.
இந்த பேச்சுவார்த்தைகளுக்காக தாய்லாந்து வர்த்தக கலந்துரையாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அவுரமன் சுப்தாவீதும் (Auramon Supathaweethum) தலைமையில் 35 அதிகாரிகள் உள்ளடங்கலான தாய்லாந்து தூதுக்குழு மார்ச் 26 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்தது.
500 அன்னதான பாத்திரங்கள் நன்கொடை
இந்நிலையில் இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படுகின்ற நீண்ட கால சமய மற்றும் கலாசார தொடர்புகளை வலுப்படுத்திக்கொள்ளும் வகையில், தாய்லாந்து குழுவினரால் கங்காராம விகாரைக்கு 500 அன்னதான பாத்திரங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.
அதேசமயம் வளர்ச்சியடைந்த, வளர்ந்துவரும் பொருளாதாரத்தைக் கொண்ட தென்கிழக்காசிய சங்கத்திற்குரித்தான நாடுகளுடன் பொருளாதார உறவுகளை பலப்படுத்திக்கொள்வதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எதிர்பார்ப்பு என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.