ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கவின் பின் ரணில் விக்கிரமசிங்க...இலங்கை வரலாற்றை மாற்றி எழுதிய ரணிலின் கைது
1815ல் ஸ்ரீ விக்கிரம இராஜசிங்க 2025ல் ரணில் விக்கிரமசிங்க இலங்கையை ஆட்சி செய்த அதியுயர் பதவியில் இருந்தவர்களில் 1815ல் ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன் ஆங்கிலேயரால் சிறைப்பிடிக்கப்பட்ட பின், 2025ல் சுமார் 210 ஆண்டுகளுக்கு பின்னராக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைதாகியுள்ளார்.
இடைப்பட்ட காலத்தில் பிரித்தானிய தேசாதிபதிகளும், 1948 சுதந்திரத்தின்பின் பிரதமர்களும், 1978 அரசியலமைப்பின்பின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளும் இலங்கை ஆட்சிக்கு தலைமைவகித்தபோதிலும் எவரும் எக்காரணத்துக்காகவும் கைது செய்யப்பட்டிருக்கவில்லை.
ரணில் கைது செய்யப்பட்டமை இலங்கையின் மன்னராட்சி காலத்துக்கு பின்னரான - மக்களாட்சி காலத்தின் முதலாவது அரச தலைவர் கைது என்பது ஓர் வரலாறு.
இனித்தான் சட்டப்புத்தகங்களும், அரசியலமைப்பின் பக்கங்களும் தீவிரமாக ஆராயப்படப் போகின்றன.குறிப்பாக அரசியலமைப்பின் 35வது சரத்து.