கோட்டாபயாவால் சபையில் அமைச்சர் - எம்பி மோதல்!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியில் இருந்தபோது, அவரது பெயரைக்கூறக்கூட அஞ்சியவர்கள் இப்போது வீர வசனம் பேசுவது நகைப்புக்குரியதாகவுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று (20) கூடிய போது நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் .பி. பெரேராவால் எழுப்பப்பட்ட வாய்மூல கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சபையில் மோதல்
இதன்போது அரசாங்கப் பணத்தைப் பயன்படுத்தி தனது பெற்றோருக்காக நினைவுத்தூபி அமைத்தது தொடர்பாக கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக விசேட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, அவர் நோய்வாய்ப்பட்டதாகக் கூறி வெளிநாடு சென்று, பின்னர் திரும்பி வந்து ஜனாதிபதியானார். ஜனாதிபதியான மறுநாளே, அவருக்கு இருந்த விலக்கீட்டுரிமை காரணமாக வழக்கு கைவிடப்பட்டது.
பாதாள உலகக் குழு உறுப்பினர்களுடன் தொடர்பு பேணிய அரசியல்வாதிகள் ; பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட தகவல்
இப்போது அவருக்கு அந்த உரிமை இல்லை. ஓராண்டு ஆகியும் இந்த வழக்கு ஏன் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை? இந்த நாட்டின் பொருளாதார அழிவுக்குக் காரணமான ஒரு பாரதூரமான வழக்கு இது.
சட்டமா அதிபருடன் இணைந்து இந்த வழக்குகளை மீண்டும் தாக்கல் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறதா? என ர் அஜித் .பி. பெரேரா கேள்வி எழுப்பினார். அதோடு இங்குள்ள பிரச்சினை வழக்குகளைத் தேர்ந்தெடுப்பதுதான் (Selection).
யாரை தண்டிக்க வேண்டும், யாரை விட்டுவிட வேண்டும் என்று யார் தீர்மானிப்பது? இது பாரபட்சமான நீதி. இதுபோன்ற 42 வழக்குகள் இருந்தன. அவை ஏன் மீண்டும் தாக்கல் செய்யப்படவில்லை?அச்சமா? அல்லது ஏதேனும் உடன்படிக்கையா ? என்றும் அஜித் .பி. பெரேரா கூறினார்.
அஜித் .பி. பெரேராவுக்கு பதில் வழங்கிய நீதி அமைச்சர், சபையின் விதிகளின்படி, முதன்மைத் தலைப்புடன் தொடர்புடைய கேள்விகளுக்கு மட்டுமே நான் பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
நீங்கள் புள்ளிவிவரங்களைக் கேட்டீர்கள், தனிப்பட்ட வழக்குகள் குறித்து அல்ல. நான் ஒன்றை மட்டும் சொல்கிறேன். கோட்டாபய ராஜபக்ச ஆட்சியில் இருந்தபோது அவர் பெயரைக் கூடக் கூற அஞ்சியவர்கள் , இப்போது வீரர்களை போன்று பேசுவதுதான் வேடிக்கையாகவுள்ளது என அவர் தெரிவித்தார்.