பாதாள உலகக் குழு உறுப்பினர்களுடன் தொடர்பு பேணிய அரசியல்வாதிகள் ; பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட தகவல்
கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட சில பாதாள உலகக் குழு உறுப்பினர்களுடன் தொடர்புகளைப் பேணிய அரசியல்வாதிகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளதாகப் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று பாராளுமன்றில் தெரிவித்தார்.
கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட சில சந்தேகநபர்களிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது, இந்த விடயம் கண்டறியப்பட்டதாக குறிப்பிட்டார்.

அதன்படி, குறித்த அரசியல்வாதிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படுகின்றன. அது தொடர்பிலான விசாரணைகள் நிறைவடைந்தவுடன் இது குறித்த தெளிவான விபரங்கள் வெளியிடப்படும்.
மேலும் சந்தேக நபர்களிடம் தற்போது விசாரணைகள் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.