சீரற்ற காலநிலை ; 5500 பேர் பாதிப்பு ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை
நாட்டில் கடந்த சில தினங்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 14 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இரத்தினபுரி, காலி, அம்பாந்தோட்டை, மொனராகலை, மட்டக்களப்பு, திருகோணமலை, களுத்துறை, கொழும்பு, கம்பஹா, புத்தளம், அநுராதபுரம், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் 1651 குடும்பங்களைச் சேர்ந்த 5500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பலத்த மழை
இம்மாவட்டங்களில் 6 குடியிருப்புக்கள் முழுமையாகவும், 234 குடியிருப்புக்கள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
காலநிலை தென்மேற்கு பருவக்காற்று படிப்படியாக நிலைபெற்று வருவதால், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
குழந்தையின்மைக்கு சிகிச்சை.. இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த மருத்துவர் ; 50 ரூபாய்க்காக இறுதியில் ட்விஸ்ட்
மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களின் சில இடங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் கேகாலை - பம்பேகம பிரதேசத்தில் 336.5 மி.மீ. மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.