குழந்தையின்மைக்கு சிகிச்சை.. இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த மருத்துவர் ; 50 ரூபாய்க்காக இறுதியில் ட்விஸ்ட்
திருத்தணி அருகே ஆயுர்வேத மருத்துவமனையில் போலி மருத்துவர் என்ற நபர் குழந்தை இல்லை என்று சிகிச்சைக்கு வந்த 19 வயது இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் கதிகலங்க வைத்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள சின்ன நாகப்பூண்டி கிராமத்தில் கிளினிக் வைத்து நடத்தி வந்தவர் 52 வயதான வைத்தியர் உள்ளூர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

அடுத்தக்கட்ட நடவடிக்கை
இந்நிலையில், சம்பவத்தன்று தாமினேரி பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் தனது கணவருடன் வைத்தியரைச் சந்திக்கச் சென்றுள்ளார். குழந்தை இல்லையெனச் சிகிச்சைக்குச் சென்ற அப்பெண்ணை, தனி அறைக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது.
அதில் அலற அடித்து வெளியே ஓடி வந்த பெண்ணை அவரது கணவர் மீட்டு திருத்தணி காவல்நிலையம் சென்று, வைத்தியரின் வக்கிர செயல் குறித்து புகார் அளித்துள்ளார். அதில் இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதியாக பாஸ்கர் மீது வழக்குப்பதிந்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அப்போதுதான் வைத்தியர் ஒரு போலி மருத்துவர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியானது. ஆயுர்வேதம் படித்ததன்னை எம்பிபிஎஸ் மருத்துவர் எனக்கூறி கொண்டு அலோபதி சிகிச்சை அளித்து நோயாளிகளின் உயிருடன் விளையாடி வந்துள்ளார்.
மற்ற மருத்துவர்களைக் காட்டிலும் 50 ரூபாய் குறைவு என்பதால் பாஸ்கரை தேடி பலரும் சிகிச்சை பெற சென்றுள்ளனர். ஆனால் அதில் எத்தனை பேருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டது என்பது குறித்துத் தெரியவில்லை.
மேலும் புகார் அளித்த ஒரு பெண்ணிற்கு மட்டும்தான் பாலியல் தொல்லை கொடுத்தாரா? அல்லது வேறு ஏதேனும் பாஸ்கரின் வக்கிர செயலால் பாதிக்கப்பட்டுள்ளார்களா? என்பது குறித்தும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இளம்பெண் அளித்த பாலியல் புகாரில் சிக்கியவர் போலி மருத்துவர் என தெரியவந்திருப்பது திருத்தணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.