மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து ; கட்டுநாயக்க செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் வெளியேறும் பகுதிக்கு அருகில் ஏற்பட்டுள்ள கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக, அப்பகுதியூடான வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் மாற்று வழிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கமைய, 18 ஆம் மைல் கல்லிலிருந்து வானூர்தி நிலையத்தை நோக்கிச் செல்லும் வாகனங்கள் மாத்திரமே தொடர்ந்து முன்னோக்கிச் செல்வதற்கு அனுமதிக்கப்படுகின்றன.

விமான நிலையத்திற்குச் செல்லாத ஏனைய அனைத்து வாகனங்களும், கட்டுநாயக்கவிலிருந்து நீர்கொழும்பு நோக்கிய வெளிச்செல்லும் மேம்பாலம் வழியாகத் திருப்பி விடப்படுவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனவே, இப்பாதையைப் பயன்படுத்தும் வாகன ஓட்டுநர்கள் போக்குவரத்து நெரிசல்களைத் தவிர்த்துக்கொள்ளும் பொருட்டு மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.