திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்; பக்தர்களுக்காக 8 அதிரடி சிறப்பு வசதிகள்!
தமிழ் கடவுள்ளாம் முருகப்பெருமானுக்கு கடைப்பிடிக்கப்படும் விரதங்களில் கந்த சஷ்டி விரதம் முதன்மையானது. குழந்தைவரம் வேண்டுபவர்கள், திருமணம் தடைப்படுபவர்கள் கந்த சஷ்டி விரதம் இருந்தால் முருகன் அருளால், விரைவில் அவர்கள் நினைத்து நிறைவேறும் என்பது ஆன்றோர் வாக்கு.
வருடம் தோறும் ஐப்பசி வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை உள்ள ஆறு நாட்கள் கந்த சஷ்டி விழாவாகவும், முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்ததைக் கொண்டாடும் விரதக் காலமாகவும் கடைபிடிக்கப்படுகிறது
அந்தவகையில் நவம்பர் 10, 2026 (செவ்வாய்க்கிழமை) நேற்று கந்த சஷ்டி விரதம் ஆரம்பமான நிலையில் சூரசம்ஹாரம் 2026 நவம்பர் 15-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ளது.

8 அதிரடி சிறப்பு வசதி
இன்னிலையில் பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 2026 நவம்பர் 15-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை திருச்செந்தூர் கடற்கரையில் நடைபெறுகிறது.
முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, வரவிருக்கும் கந்த சஷ்டி மற்றும் சூரசம்ஹாரம் திருவிழாவை முன்னிட்டு முருகன் திருக்கோயில்களில் பக்தர்களுக்காக 8 அதிரடி சிறப்பு வசதிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் அறிவித்துள்ளார்.
பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க கூடுதல் தரிசன வரிசைகள், மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு நீண்ட வரிசையின்றி நேரடி தனி தரிசன வசதியும் செய்யப்பட்டுள்ளன.
காத்திருக்கும் இடங்களில் சுத்தமான குடிநீர், இலவச சிற்றுண்டி, மருத்துவ உதவி மையங்கள் மற்றும் அவசர ஊர்திகள் தயார் நிலையில் இருக்கும். சூரசம்ஹாரத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவர் என்பதால் கூடுதல் பாதுகாப்பு, கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் நெரிசல் மேலாண்மைத் திட்டங்கள் அமல்படுத்தப்படவுள்ளன.
மேலும், கோயில் பணியாளர்கள் பக்தர்களிடம் கனிவுடனும் மரியாதையுடனும் நடக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவை அனைத்துக்கும் மேலாக, அனைத்து முருகன் கோயில்களிலும் ஓதுவார்களை கொண்டு தமிழில் திருப்புகழ் பாராயணம், பக்தி பாடல்கள் மற்றும் தமிழ் வழிபாட்டிற்கு முதன்மை இடம் அளிக்கப்படும்.
தமிழ் ஆன்மீக புரட்சியாக அமைந்துள்ள இத்திட்டங்கள் குறித்த செயலறிக்கையை உடனடியாகச் சமர்ப்பிக்கக் கோயில் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.