நடிகை தமிதாவால் சிறைக்காவலருக்கு சிக்கல்!
பிணையில் விடுவிக்கப்பட்ட நடிகை தமிதா அபேரத்ன ஊடகங்களுக்கு வழங்கிய பகிரங்க அறிக்கை தொடர்பில் விசாரணை நடத்துமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய வெலிக்கடை சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டுள்ளார்.
சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தமிதா அபேரத்ன,
வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவின் பிரதான சிறைக்காவலர் தன்னை அழுக்கான பெண்கள் இருக்கும் இடத்தில் வைக்குமாறு சிறைச்சாலை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக அவர் தெரிவித்தார்.
திணைக்கள உயர் அதிகாரிகளுக்கு எதிராக பெண் சிறை அதிகாரி ஒருவர் இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தால் அது பாரதூரமான நிலைமையாக இருந்திருக்கும். எனவே விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் கழிப்பறைக்கு அருகில் அசுத்தமான இடத்தில் தான் தடுத்து வைக்கப்பட்டதாக நடிகை தமிதா ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.