மீனாவின் கணவர் குறித்து அப்பகுதி மக்கள் உருக்கத்துடன் கூறிய தகவல்!
தமிழ் திரையுலக்கில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் கதாநாயகியாக பல படங்களில் நடித்தவர் நடிகை மீனா. இவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
நடிகை மீனா தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் 2009 ஆம் ஆண்டு மீனா மென் பொறியாளர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இப்போது நைனிகா என்ற மகள் உள்ளார். நைனிகா தளபதி விஜய்யுடன் தெறி படத்தில் அவருக்கு மகளாக நடித்திருப்பார்.
இதேவேளை நேற்றைய தினம் நடிகை மீனாவின் கணவர் நுரையீரல் பாதிப்பால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரின் மரணம் திரையுலகினரிடையே பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் மீனாவின் கணவர் தொடர்பில் வீட்டு பகுதியில் வசிப்பவர் கூறியது,
நடிகை மீனாவின் கணவர் எப்போதும் சிரித்த முகத்துடன்தான் இருப்பார். மீனாவும் போகும் போதும் வரும் போதும் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார் என அப்பகுதியில் உள்ளவர்கள் கலக்கத்துடன் கூறியுள்ளார்.