NPPயின் எம்.பியை தாக்கிய பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த நிலை
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமாரவினால் தான் தாக்கப்பட்டதாகத் தெரிவித்த சூரியகந்த பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார தன்னைத் தாக்கியதாக குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், குற்றம்சாட்டியிருந்த நிலையில், அவர் மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னதாகக் கைது செய்யப்பட்டிருந்தார்.

பின்னர் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நீதிமன்றினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், அவருக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள ஒழுக்காற்று விசாரணைகளை முன்னிட்டு, அவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.