மாமனாரின் நிலத்தில் கஞ்சா; NPP எம்.பியை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர்
தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமாரவை தாக்கினார் என்ற குற்றச்சாட்டில் சூரியகந்தை பொலிஸின் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பத்மகுமார தன் முகத்தில் கசிப்பு அடங்கிய பக்கெட்டினால் தாக்கினார் என ஏற்கனவே மேற்படி பொலிஸ் உத்தியோகத்தர் குறிப்பிட்ட நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.

மாமனாரின் நிலத்தில் கஞ்சா
இரத்தினபுரி மாவட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர், தனது மாமனாரின் நிலத்தில் கஞ்சா பயிரிட்டமை தொடர்பில் சோதனை நடத்தியதாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தின்போது பொலிஸ் உத்தியோகத்தர் மது அருந்தி இருந்ததாக பொலிஸ் தரப்பில் சொல்லப்படுகின்றது.