நாசா வரை முதலமைச்சர் விஜய்யின் சைகை; சமூக வலைத்தளங்களில் வைரல்!
நாசா (NASA) விண்வெளி நிலையத்தின் முன்னாள் விஞ்ஞானியான மருத்துவர் டோன் தோமஸ் (Dr. Don Thomas), தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் அவர்களின் தீவிர ரசிகர் என்றும், அவரது திறமையான நிர்வாகத்தைப் பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளமை சமூக வலைத்தளங்க்களில் வைரலாகியுள்ளது.
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றில் சிறப்பு விழா வில் நாசா (NASA) விண்வெளி நிலையத்தின் பிரபல விஞ்ஞானி மருத்துவர் டோன் தோமஸ் கலந்துகொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

சமூக வலைத்தளங்களில் வைரல்
நிகழ்வின் போது, நாசா விண்வெளி நிலையத்தின் சென்னை கிளை பிரதம நிறைவேற்று அதிகாரி காயம்பு இராமலிங்கம், தமிழக முதல்வர் விஜய் குறித்து மருத்துவர் டோன் தோமஸிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த மருத்துவர் டோன் தோமஸ், தான் தமிழக முதல்வர் விஜய்யின் தீவிர ரசிகன் என்று பெருமிதத்துடன் தெரிவித்தார். மேலும், முதலமைச்சர் விஜய்யின் திறமையான நிர்வாகத்தையும் அவர் வெகுவாகப் பாராட்டினார்.
அதன் தொடர்ச்சியாக, முதல்வர் விஜய்யின் வைரலான கை சைகையை மேடையில் செய்து காட்டி அங்கு கூடியிருந்த மாணவர்களையும், பார்வையாளர்களையும் பெரும் வியப்பில் ஆழ்த்தினார்.